Wednesday, December 24, 2025

போதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் மற்றும் அவரது மனைவி இலக்கியா. இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்.

மதுபழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், மது வாங்க பணம் கேட்டு தனது மனைவியை தொல்லை செய்து வந்தார். இதனால் இருவருக்குள் அடிக்கடி வாக்குவாதம் நடந்துவந்ததாக சொல்லப்படுகிறது.

நேற்று, மதுபோதையில் மீண்டும் மதன்ராஜ் மனைவியிடம் வாக்குவாதம் தொடங்கினார். இதனால் இலக்கியா அருகே உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மதன்ராஜ் அவரை துரத்திச் சென்று, தன்னிடம் இருந்த அரிவாளால் அவரது வலது கையை வெட்டியுள்ளார். பின்னர் அந்த கையை குளத்தில் வீசியுள்ளார்.

கைவெட்டால் வலியுடன் அலறிய இலக்கியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து மதன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News