டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து பாஜக மேலிடத்தின் வற்புறுத்தலின் பேரில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.
