இந்தியாவில் ஆன்லைனில் பல உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. இதில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவு டெலிவரி செயலியாக ஸ்விக்கி உள்ளது.
இந்நிலையில் ஸ்விக்கி நடப்பாண்டில் தங்களுடைய ஸ்விக்கி செயலி வாயிலாக எந்த உணவு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டது என்பது குறித்த சுவாரசியமான தகவல்களை வெளியிட்டு உள்ளது.
ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் தொடர்ந்து 10-வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
2025-ம் ஆண்டில் ஸ்விக்கி தளத்தில் மட்டும் 9 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் 194 பிரியாணி ஆர்டர் ஸ்விக்கிக்கு வந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
