அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார் என கூறியுள்ளார்.
