சீனா யாருக்கும் தெரியாமல் பூமிக்கடியில் ஒரு பிரம்மாண்டமான, அதே சமயம் மிக ஆபத்தான வேலையைச் செய்து முடித்திருக்கிறது! மங்கோலியா எல்லைக்கு அருகே, பூமிக்கடியில் ரகசியமாகக் கட்டப்பட்ட “சைலோ” (Silo) எனப்படும் பாதுகாப்பு அரண்களில், நூற்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைகளைச் சீனா நிரப்பி வைத்துள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் ஒரு பகீர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்குப் பெயர் DF-31 (Dongfeng-31). இது சாதாரண ஏவுகணை இல்லைங்க… கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM)! இதன் பயங்கரம் என்னவென்றால், இது சுமார் 7,000 முதல் 11,700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. அதாவது, சீனாவில் இருந்து ஒரு பட்டனைத் தட்டினால் போதும்… அது அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமல்ல, நம்ம இந்தியாவின் எந்த மூலையையும் துவம்சம் செய்துவிடும்.
இதைவிடப் பெரிய ஆபத்து என்னவென்றால், இவை அனைத்தும் “சாலிட் ஃப்யூல்” (Solid Fuel) ஏவுகணைகள். திரவ எரிபொருள் ஏவுகணை என்றால், அதை ஏவுவதற்கு முன் நிரப்ப நீண்ட நேரம் ஆகும். ஆனால், இந்த சாலிட் ஃப்யூல் ஏவுகணைகளை நினைத்த மாத்திரத்தில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மின்னல் வேகத்தில் ஏவ முடியும். எதிரிகள் சுதாரிப்பதற்குள் வேலை முடிந்துவிடும்!
இதில் உள்ள இன்னொரு மிரட்டலான தொழில்நுட்பம் MIRV (எம்.ஐ.ஆர்.வி). அப்படின்னா என்ன தெரியுமா? ஒரே ஒரு ஏவுகணை விண்ணில் பாய்ந்தால் போதும், அது பாதியிலேயே பிரிந்து பல அணுகுண்டுகளாக மாறி, ஒரே நேரத்தில் பல வேறுபட்ட நகரங்களைத் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது.
2024 கணக்குப்படி சீனாவிடம் சுமார் 600 அணு ஆயுதங்கள் உள்ளன. இது 2030-க்குள் 1000-ஐத் தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம்” என்று சீனா வெளியில சொன்னாலும், இப்படி எல்லையோரங்களில் 100 ஏவுகணைகளைத் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருப்பது, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது. சீனாவின் இந்த ரகசிய நடவடிக்கை, உலக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது!
