Wednesday, December 24, 2025

SIR நடவடிக்கை : மத்திய பிரதேசத்தில் 42 லட்சம் பேர் நீக்கம்

கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான SIR வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 95 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் SIR நடவடிக்கைகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கான SIR நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது கேரளா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மத்தியப் பிரதேசத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலில், 42 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் 24 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர்கள் பட்டியலில் 27 லட்சத்து 34 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து 64 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக SIR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் 3 கோடியே 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News