புதுச்சேரியில் அரசு பள்ளி அருகே நிறுவப்பட்ட லெனின் சிலையை அகற்றக் கோரி பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினரும் எதிர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள லெனின் படிப்பகத்தில் லெனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலையை உடனடியாக அகற்றக்கோரியும், பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போக்குவரத்து சீரமைத்தனர்.
பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினரும் எதிர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், இருதரப்பினரையும் போலீசார் விரட்டி அடித்தனர்.
