இந்த மாதம் நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட் எடுத்துக் கொண்டு காத்திருந்த பயணிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்க மத்திய அரசு காலக்கெடு விதித்தது. இதனைத் தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு டிக்கெட் தொகையை ரீபண்ட் செய்தது.
இந்நிலையில், விமான சேவை ரத்து அல்லது தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்த வவுச்சர்கள் டிசம்பர் 26ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. இந்த பயண வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
