தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி விவசாய பெருமக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும் விவசாயப் பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள் என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னல்களையும் , இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் விவசாயிகளின் தியாகம் அளவிட முடியாதது என்றும் உழவர் வாழ்வு உயர, தேசம் உயர, உறுதி எடுத்துக்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
