அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படம் மிடில் கிளாஸ். இப்படம் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 24ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
