Monday, December 22, 2025

திட்டமிட்டபடி தொடர் வேலை நிறுத்தம் : தேதியை அறிவித்த ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஜாக்டோ – ஜியோ அறிவித்துள்ளது.

Related News

Latest News