பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமர் சிங் சாஹல், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது வீட்டில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து 16 பக்கங்கள் கொண்ட ஒரு குறிப்பை போலீசார் மீட்டுள்ளனர். அதில், ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏற்பட்ட பெரும் நிதி இழப்பு மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
