ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.
இதையடுத்து, அவதார் படத்தின் மூன்றாம் பாகமான ‘அவதார் 3’ கடந்த 19ம் தேதி வெளியானது. படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், உலகளவில் ரூ. 3,000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் ரூ 800 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
