இமாச்சலப் பிரதேசத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும் ஒரு மருத்துவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளிக்கும் ஒரு மருத்துவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து படுக்கையில் படுத்திருந்த நோயாளி மருத்துவரை உதைக்கத் தொடங்கினார், பதிலுக்கு மருத்துவர் கோபமடைந்து படுக்கையில் இருந்த நோயாளியை தாக்கியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
