தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சோதனைக்கு பிறகு அது புரளி என்பது தெரிய வருகிறது.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதன் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சோதனை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.
