திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, ஆர்கே பேட்டை தாலுக்கா ஐயனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், சதீஷ். இவர்கள் இருவரும் ஐயனேரி இந்த கிராமத்தில் திருமணமான பெண்கள், சிறுமிகள் என ஒருவரையும் விடாமல் கிராமத்தில் இருக்கும் அனைத்து பெண்களையும் கேலி கிண்டல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதை பார்த்த கிராம மக்கள் இருவரையும் எச்சரித்து பலமுறை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் மீண்டும் மது போதையில் வந்ததாகவும், இரவு நேரம் என்றும் பாராமல் பெண்களை கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கிராம மக்கள் இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கிருந்து சென்ற இளைஞர்கள், தன்னுடன் நண்பர்களை சேர்த்து அடியாட்களுடன் 10 பேர் ஒன்று கூடி மீண்டும் கிராமத்துக்குள் வந்து கத்தியை வைத்து, நானும் ரவுடிதான் எனக்கூறி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், 10 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். இதை பார்த்த இளைஞர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களை மடக்கிப்பிடித்த கிராம மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி அடித்துள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
