Monday, December 22, 2025

போக்குவரத்துக்கு இடையூறு., பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சேலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாநகர் மாவட்ட பாஜகவினர் கடந்த19ஆம் தேதி மாலை தொங்கும் பூங்கா அருகில் உள்ள மேம்பாலம் பகுதியில் திரண்டு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட பூர்ண சந்திரன் படத்தை வைத்து தீபம் ஏற்றினர். அனுமதியின்றி பாஜகவினர் பாலம் பகுதியில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக எஸ்.ஐ.ரவி அளித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார், அனுமதியின்றி சாலையில் திரண்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News