வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி உள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
