சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் இப்படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. சிவகார்த்திகேயன் வந்த கார், முன்னால் சென்ற கார் மீது லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
