வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத்தில், 73.73 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் எஸ்.ஐ.ஆருக்கு முன்பு, 5,08,43,436 வாக்காளர்கள் இருந்தனர், தற்போது 4,43,70,109 பேர் வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இறந்தவர்கள் 18.07 லட்சம், இருப்பிடம் தெரியாதவர்கள் 9.69 லட்சம், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள் 40.25 லட்சம், 2 இடங்களில் பதிவு செய்திருந்தவர்கள் 3.81 லட்சம் பேர் அடங்குவர்.
