Saturday, December 20, 2025

திருச்சி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் : 3 லட்சம் பேருக்கு மேல் நீக்கம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. டிசம்பர் 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது.

தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை = 23,68,967

திருச்சி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை = 3,31,787

திருச்சி மாவட்டத்தில் தற்போது உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை = 20,37,180

Related News

Latest News