தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. டிசம்பர் 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் பகல் 2 மணிக்கு பதிலாக, மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இதில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
