சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 626 மின்சார பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பேருந்துகளும், 2-வது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
இந்நிலையில் இன்று, மூன்றாம் கட்டமாக பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனை திறந்து வைக்கப்பட்டது. ரூ.214.50 கோடி மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
