தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது 67. இவரது மனைவி செண்பகவல்லி வயது 65. இருவரும் தனது 42 வயது மகள் 37வது மகள் ஆகிய இருவருடன் கடந்த டிசம்பர் 10ம் தேதி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் கரையில் உள்ள திருவரங்கம் யாத்திரி நிவாஸில் வந்து தங்கியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. 4 பேர் தங்கி இருந்த அரை பூட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலையில் அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதை பார்த்ததும் ஊழியர்கள் சந்தேகத்தின் பெயரில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்ததும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது 4 பேரும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். அவர்கள் 4 பேரும் உணவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 4 பேர் உடல்களை மீட்டு ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
