Saturday, December 20, 2025

செல்பி எடுக்க முயன்ற ரசிகரை தடுத்த பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விமான நிலையத்தில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து, தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர், பும்ராவை தனது செல்போனில் செல்பி வீடியோ எடுத்துள்ளார்.

அதனை விரும்பாத பும்ரா முதலில் ரசிகரிடம் எதோ கூறுகிறார். இருப்பினும் அந்த ரசிகர் வீடியோ எடுப்பதை நிறுத்தவில்லை. இதனால் பும்ரா ரசிகரின் செல்போன் கேமராவை மறைத்தார்.

Related News

Latest News