உலகில் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த பட்டியலில் முதலிடத்தில் ‘கொசு’ இடம்பெற்றுள்ளது.
தோற்றத்தில் கொசு சிறிய அளவில் இருந்தாலும், அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம், விளைவு மிக மிக அதிகம். கொசு கடிப்பதால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பல கொடிய நோய்களை ஏற்படுத்தி அதன் மூலம் மரணத்தை கொடுக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கொசுக்கள் உலகில் சுமார் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான உயிர்களை காவு வாங்குகிறது. இதிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது என்னவென்றால், வெறும் கொசு தானே என சாதாரணமாக எடுக்காமல் அதை தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தாவிட்டால், இன்னும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதில் இன்னொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் கொசுவுக்கு அடுத்தபடியாக, மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் 4.75 லட்சம் பேர் மனிதர்களால் மனிதர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
