Saturday, December 20, 2025

எட்டாக்கனியாக மாறப்போகும் தங்கம்., 2026ல் தங்கத்தோட விலை இதுதான்

இந்த 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, 1 கிராம் தங்கத்தின் விலை 7800 ரூபாயாக இருந்தது. வருடம் முடியப்போகும் இந்த டிசம்பரில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 13,506 ரூபாயாக உயர்ந்துள்ளது. 12 மாதங்களுக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,706 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

இன்றைய தேதியில் 8 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சத்து 8 ஆயிரத்து 48 ரூபாயாகவும், 10 கிராம் தங்கம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 60 ரூபாயாகவும் இருக்கிறது. இந்த நிலவரங்களை வைத்துப் பார்க்கும்போது, இனிமேல் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

Also Read : நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலை : 2026ல் வெள்ளியின் விலை இப்படித்தான் இருக்கும்!

இந்தநிலையில் உலக தங்க கவுன்சில், 2026ம் ஆண்டு தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்ற கணிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி 10 கிராம் தங்கத்தின் விலை 2026ம் ஆண்டு இறுதிக்குள், 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் தங்கம், வெள்ளிக்கு இணையாக பிளாட்டினத்தின் விலையும் அதிகரிக்கலாம் என்றும் தங்க கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.

தங்க ETF, தங்கத்தில் மற்ற முதலீடுகளுக்கு மாறுவோர் அதிகரிப்பு, ஜப்பானில் நடைபெறும் பெரிய அளவிலான தலைமுறை சொத்து மாற்றம் மற்றும் சீன கட்டுப்பாடுகள் நீக்கம் ஆகியவை தங்கம் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

Related News

Latest News