சென்னையில் ராட்வீலர், பிட்புல் வகை நாய்களை வளர்க்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
நாளை முதல் தடை செய்யப்பட்ட நாய் இனங்களான பிட்புல், ராட்வீலர் ஆகியவற்றை புதிதாக வாங்கி வளர்த்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும் போது அவற்றிற்கு கழுத்துப்பட்டை மற்றும் வாய்க்கவசம் அணிவிப்பதை கட்டாயம் ஆக்கவும், இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
