உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் பர்தா அணியாத மனைவி மற்றும் 2 மகள்களை நபர் ஒருவர் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஃபரூக் என்பவருக்கு, தாஹிரா என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 9 அன்று தாஹிரா பர்தா அணியாமல் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ஃபரூக், வீடு திரும்பிய மனைவியை துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு, அவரது 14 வயது மகளை சுட்டுக்கொன்றார். இதற்கிடையில், அங்கு வந்த அவரது 8 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். கொலை செய்த பிறகு, மூன்று உடல்களையும் வீட்டின் உள்ளே ஏற்கனவே திட்டமிட்டு தோண்டி வைத்த குழியில் புதைத்துள்ளார்.
இதையடுத்து தாஹிரா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என்று பரூக்கின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் ஃபரூக்கிட்டும் விசாரணை நநடத்தினர். விசாரணையில் தனது மனைவி புர்கா அணியாமல் வெளியே சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாகப் ஃபரூக் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஃபரூக் மீது கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
