ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலைகளை அதிகரிக்கக்கூடும்.
மொபைல் ரீசார்ஜ் விலைகளை 16 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று அறியப்படுகிறது. இது தினசரி அழைப்பு மற்றும் டேட்டாவை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மொபைல் பயனர்களை நேரடியாக பாதிக்கும்.
மொபைல் ரீசார்ஜ் விலைகள் உயர்த்தப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டில்15 முதல் 50 சதவீதம் வரை விலைகள் உயர்த்தப்பட்டன. 2021 ஆம் ஆண்டில் 20 முதல் 25 சதவீதம் வரையிலும், 2024 ஆம் ஆண்டில் 10 முதல் 20 சதவீதம் வரையிலும் விலைகள் உயர்த்தப்பட்டன.
2026 ஆம் ஆண்டில் மற்றொரு விலை உயர்வு ஏற்பட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் இது நான்காவது பெரிய விலை உயர்வாகும்.
5G விரிவாக்கம் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் சிறந்த நெட்வொர்க்குகள், சிறந்த கவரேஜ் மற்றும் சேவைகள் தேவைப்பட்டால், விலைகளை உயர்த்துவது அவசியம் என்று நிறுவனங்கள் கூறுகின்றன.
