மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி பகுதியை சேர்ந்தவர் ரோஷன் சதாசிவ் என்ற விவசாயி. விவசாயத்தில் ஏற்பட்டு வந்த இழப்பு காரணமாக பால் மாடு வாங்கத் திட்டமிட்டார். இதற்காக உள்ளூர் கந்துவட்டிக்காரர்களிடம் ரூ.1லட்சம் வட்டிக்கு வாங்கினார். அந்தப் பணத்தில் மாடுகள் வாங்கினார். ஆனால் தொழில் தொடங்குவதற்கு முன்பு மாடுகள் இறந்துவிட்டன.
இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்பக் கொடுக்கும்படி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் கடனை திரும்பக் கொடுக்க அவரிடம் பணம் இல்லை. இதனால் நாளுக்கு நாள் வட்டி அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் வாங்கிய ரூ.1லட்சம் கடன் ரூ.74 லட்சமாக அதிகரித்தது.
தன்னிடம் இருந்த டிராக்டர், விவசாய நிலம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை விற்பனை செய்து கடனை கொடுக்க முயன்றார். ஆனாலும் அவரால் கடனை முழுமையாக கொடுக்க முடியவில்லை. இதனால் அவரது ஒரு சிறுநீரகம் ரூ.8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அப்படியும் கடனை அடைக்க முடியவில்லை.
இதையடுத்து அங்கிருந்து பிரம்மபுரி தொகுதி எம்.எல்.ஏ.விற்கு தகவல் கொடுத்தார். அரசியல்வாதிகளின் தலையிட்டு தூதகரம் வாயிலாக ரோஷன் அங்கிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரம்மபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
