ஏஐ தொழில்நுட்பம் பிரபலங்களுக்கு, குறிப்பாக நடிகைகளுக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் ஸ்ரீலீலாவும் இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்டார்.
இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ், தன்னை தவறாக சித்தரித்து வெளியிட்ட ஏஐ புகைப்படங்களுக்கு எதிராக காட்டமாக பதிவிட்டு இருக்கிறார். இவர் தமிழில் வெளியான ஜில்லா, பாபநாசம், தர்பார், போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தனது புகைப்படங்களை ஏஐ மூலம் மார்ஃபிங் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தனது தனிப்பட்ட தனியுரிமை மீதான தாக்குதல் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ். தேவையற்ற விஷயங்களைப் பகிர்ந்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
