சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகி இருக்கும் பராசக்தி, ஜனவரி 14ம் தேதி பொங்கல் விருந்தாக திரையங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை 50 கோடிக்கும் அதிகமாக கொடுத்து, Zee5 நிறுவனம் கைப்பற்றி இருக்கிறதாம்.
இந்தநிலையில் பராசக்தி படத்தின் கதை இதுதான் என்று, சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது மிகப்பெரிய அளவில் நடைபெறும் போராட்டம் ஒன்றை ஒடுக்க, நாயகன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அங்கு போராட்டத்தை முன்னின்று நடத்துவது அவரது சகோதரன் தான் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்.
போராட்டத்தை ஒடுக்கி சகோதரனை கைது செய்தாரா? இல்லை பாசத்தில் தடுமாறுகிறாரா? என்பது தான் கதையாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் மெட்ராசில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி, திரைக்கதையை சுதா கொங்கரா எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதுதான் படத்தின் கதையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
