அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘டிராகன்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இதனைத் தொடர்ந்து, அவரின் அடுத்த படத்தையும் அதே நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி நீண்ட காலமாகியும், சிம்புவின் தொடர்ச்சியான கமிட்மென்ட்கள் காரணமாக இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சிம்பு – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாக உள்ள படம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “எஸ்டிஆர் 51 படத்திற்கு பாடல்கள் வேண்டாம் என்று நான் சொன்னால், அஸ்வத் மாரிமுத்துவின் மனம் உடைந்துவிடும். ஏற்கனவே இந்த படத்திற்காக அவர் நான்கு டான்ஸ் பாடல்களை திட்டமிட்டு வைத்துள்ளார். இது முழுக்க முழுக்க ரொமாண்டிக் அம்சங்கள் நிறைந்த காதல் படமாக இருக்கும்.
நமது தமிழ் படங்கள் எப்போதும் பாடல்களோடுதான் வாழ்ந்து வருகின்றன என்று நினைக்கிறேன். லோகேஷ் கனகராஜ் படங்களில் பாடல்கள் இல்லாவிட்டாலும், அனிருத் ரவிச்சந்திரின் பின்னணி இசை முக்கிய இடம் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்துள்ள இந்த தகவல்கள், சிம்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
