சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
இந்த படம் 1960 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளதால், கார், உடை, செட் என அனைத்தும் அதற்கு தகுந்தபடி தத்ரூபமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பராசக்தி படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனம் 52 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதன் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு ஓடிடி உரிமம் விற்கப்பட்ட படம் இது தான் என கூறப்படுகிறது. ஜனவரி 14-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
