Wednesday, December 17, 2025

அதிர்ச்சி தகவல் : தமிழ்நாட்டில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, லட்சக்கணக்காண வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஷ்கர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்றது.

தற்போது வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல் என்னவென்றால் தமிழ்நாட்டில் வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்லல் ஆணையம் வெளியிட உள்ளது. இதன்படி தமிழகத்தில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிலும் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாத தரவுகளின் படி தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டால், அது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் 58 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. அதே போல புதுச்சேரியில் 85,531 வாக்காளர்களை நீக்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Related News

Latest News