Wednesday, December 17, 2025

கோவை மக்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சொன்ன குட் நியூஸ்

சென்னைக்கு இணையாக கோவையில் ஐடி நிறுவனங்கள், கல்வி, மருத்துவம், தொழில் என பல்வேறு தேவைகளுக்காக பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து வசிக்கின்றனர். பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னணி ஐடி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் கோவையில் முதலீடு செய்து வருகின்றன.

இந்நிலையில் கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 50 வருட பழமையான உப்பிலிபாளையம் மேம்பாலம் ரூ.16 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் வாகனங்களின் அதிகரிப்பால் இந்த மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த விரிவாக்கப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி உத்தரவு விரைவில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News