கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. கேரளாவில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக.
இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில், எல்டிஎஃப் வெற்றி பெறவில்லை என்றால், தனது மீசையை எடுத்துவிடுவேன் என தேர்தலுக்கு முன்பு சவால் விடுத்திருந்தார். ஆனால் தேர்தலில் எல்டிஎஃப் தோல்வி அடைந்தது. இதனால், தான் தேர்தலுக்கு முன்பு சொன்னதுபோலவே தனது மீசையை வழித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
