வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா..? எப்படி செக் செய்வது?

தமிழ்நாடு 2026-ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் நவம்பர் 4-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR)-ஐத் தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டவற்றை இணையத்தில் பதிவேற்றினர். இந்தப் பணிகள் இன்று (டிசம்பர் 14, ஞாயிறு) முடிவடைகின்றன.

எப்படி செக் செய்வது?

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள வாக்காளர் சேவை போர்டல் (VOTERS’ SERVICE PORTAL) https://electoralsearch.eci.gov.in/ மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

EPIC மூலம் தேடல்

EPIC மூலம் தேடலில் வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணைப் பதிவு செய்து உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து கீழே இருக்கும் Captcha Code சரியாக பதிவு செய்தால் போதும் அனைத்து தகவல்களும் வந்துவிடும்.

Search by details

உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களைப் பதிவிட வேண்டும். பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சமயத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

மொபைல் எண் மூலம் தேடல்

அதில் உங்க தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை கொடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Captcha Code சரியாக பதிவு செய்தால் OTP வரும் அதனை பதிவு செயவதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.

Related News

Latest News