மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை.
இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது முழுமையாக கட்டி முடிக்கப்படும்? என திமுக எம்பி அருண் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் திட்ட பணிகள் இதுவரை 42% நிறைவடைந்திருக்கிறது என்றும், அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் பணியை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம் எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
