குஜராத் மாநிலம், ஔரங்கா ஆற்றின் மீது பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கட்டுமானப் பணிகளில் இருந்த ஒரு பாலம் இடிந்து விழுந்தது. 105 தொழிலாளர்கள் அந்த இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கட்டுமானத்தில் இருந்த ஒரு பாலத்தின் இவ்வளவு பெரிய பகுதி இடிந்து விழுந்தது கட்டுமானத்தின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
