Saturday, January 31, 2026

மதம் மாறி திருமணம், மாப்பிள்ளை குடும்பத்தை வெட்டி, பெண்ணை கடத்தி சென்ற 9 பேர் கைது

நாகையில் மதம் மாறி திருமணம் செய்த மாப்பிள்ளை குடும்பத்தை சரமாரியாக வெட்டி, பெண்ணை கடத்தி சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவை சேர்ந்த ராகுல் – கீர்த்தனா மதம்மாறி, நாகை வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். மாப்பிள்ளை குடும்பத்தினர், வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மணமக்களுடன் தங்கியிருந்தனர். இதனையறிந்த பெண்ணின் வீட்டார்.

வேளாங்கண்ணிக்கு வந்த, அவர்களை சரமாரியாக வெட்டி, பெண்ணை தூக்கி சென்றனர். காயமடைந்த மாப்பிள்ளை வீட்டார் ஒரத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பெங்களுர் தப்பிசெல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை, உறவினர்கள் உள்பட 9 பேரை வேளாங்கண்ணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Related News

Latest News