விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அருகே 25 ஆண்டுகளாக பெருமாள், குருவம்மாள் ஆகிய முதியவர்கள் டீக்கடை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், குருவம்மாள் தனியாக இருந்த போது, கடைக்கு வந்த மர்மநபர் டீ குடிப்பது போல் நடித்து, 26 கிராம் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இச்சம்பவத்தில் உடனடியாக புகார் மனு வாங்காமல், காவல்துறையினர் அலட்சியம் காட்டியதாக பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டியுள்ளார்.
இதனிடையே ரயில்வே நிலையம் செல்லும் சாலையில், போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
