தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு இரவில் குளிர்வாட்டும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தென் இந்திய பகுதிகளில், வறண்ட வாடைக்காற்று வலுவாக வீசுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு இரவில் குளிர்வாட்டும் என்றும் மலைப்பிரதேசங்களில் இருப்பது போல உணர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பகல் நேரங்களில் சென்னை – குமரி வரையிலான கடலோர மாவட்டங்கள், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நீலகிரி, உதகை, குன்னூர், கோவை, திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய இடங்களில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் முதல் 10 செல்சியச் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
16,17, 18ம் தேதிகளில் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புள்ளது என்றும் அதன்பின்னர் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுபெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
