சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பேருந்தின், சோதனை ஓட்டம் சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.
முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட டபுள் டக்கர் பஸ் மாமல்லபுரம் பஸ் நிலையத்துக்கு வந்தவுடன் அதற்குள் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக ஏறி பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சாதாரண மின்சார பஸ்களில் 60 பயணிகள் மட்டுமே பயணிக்கும் நிலையில், இந்த டபுள் டக்கர் பஸ்களில் 90 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மின்சார சார்ஜ் செய்யப்பட்டு, அதிநவீன பேட்டரி மூலம் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல் மாசை தடுக்கும் வகையிலும், டீசல் செலவை குறைக்கும் வகையிலும், டபுள் டக்கர் பேருந்தின் சேவையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
