எடப்பாடி பழனிச்சாமி நடத்தியது அதிமுக பொதுக்குழு கூட்டம் அல்ல பொதுக்கூட்டம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருங்கற்கள் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாங்கண்ணியில் மீன் ஏலக்கூடம் அமைக்கும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அதிமுக பொதுக்குழு அவர்களின் தொண்டர்களை உற்சாகப் படுத்த நடத்தப்பட்டது என்றும், பொதுக்குழு என்பது தேர்தல் வியூகம் அமைக்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் அதிமுக நடத்தியது பொதுக்குழு அல்ல , அது பொதுக்கூட்டம் என விமர்சித்தார்.
