கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் அரசு உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவி ஒருவருக்கு வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து மாணவி இந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த பெற்றோர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் பள்ளிக்கு சென்று ஆசிரியரை வெளியே இழுத்து வந்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அத்துடன் அவரது சட்டையை கிழித்து எறிந்தனர்.
பின்னர் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
