Wednesday, December 24, 2025

3 நாள்களுக்குப் பிறகு ஏற்றத்தில் பங்குச்சந்தை

மும்பை பங்குச் சந்தை வியாழக்கிழமை (இன்று) வலுவான ஏற்றத்துடன் தொடங்கி, காலை 11:30 மணியளவில் சென்செக்ஸ் 84,456.75 புள்ளிகளில் இருந்து 174.94 புள்ளிகள் உயர்ந்து 84,566.21 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, தேசிய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 67.15 புள்ளிகள் அதிகரித்து 25,825.15 புள்ளிகளில் நிலையாக உள்ளது.

கடந்த மூன்று நாட்கள் சரிவடைந்த பங்குச் சந்தை இன்று ஏற்றம் கண்டுள்ளது. சென்செக்ஸில் எடர்னல், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, கோடக் வங்கி, இன்ஃபோசிஸ், பிஇஎல், அதானி போர்ட்ஸ், எம் & எம், எல் & டி மற்றும் எஸ்பிஐ பங்குகள் 1.7% வரை உயர் விலைகளுடன் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

அதே சமயத்தில், டைட்டன், ஏசியன் பேண்ட்ஸ், எச்சிஎல் டெக், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ட்ரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் இழப்பை சந்தித்து வர்த்தகம் நடத்துகின்றன.

எஃப்எம்சிஜி, ஐடி மற்றும் ஆயில் & கேஸ் குறியீடுகள் குறைந்துள்ளன. நிஃப்டி மெட்டல் மற்றும் ஆட்டோ துறைகள் முறையே 0.6% மற்றும் 0.4% உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்று வருகின்றன.

Related News

Latest News