Friday, January 30, 2026

விஜய்யுடன் பணியாற்றிய முக்கிய நபர் திமுகவில் இணைந்தார்

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். இவர் சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். “விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்று கூறினார்.

விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் சமீபத்தில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று பிடி செல்வகுமார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

Related News

Latest News