மகாராஷ்டிராவில் சிறுத்தை வேடமிட்டு சட்டப்பேரவைக்கு வருகை தந்த எம்எல்ஏவின் வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்ராவில் பெருகி வரும் சிறுத்தைகளின் அச்சுறுத்தல் பிரச்னையை முன்னிலைப்படுத்தும் வகையில், ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனா எம்எல்ஏ சரத் சோனாவனே, சிறுத்தை வேடமணிந்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வருகை தந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜுன்னார் தாலுகாவில் மட்டும் சிறுத்தை தாக்குதல்களால் கடந்த 3 மாதங்களில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பகுதி மக்கள் தொடர்ச்சியான அச்சத்தில் உள்ளனர்.
எனவே, மாநில அரசு உடனடியாக அவசரநிலையை அறிவித்து, ஜுன்னார் தாலுகா மற்றும் அஹில்யநகர் மாவட்டத்தில் சுமார் 2,000 சிறுத்தைகள் வரை தங்கக்கூடிய மீட்பு மையங்களை உருவாக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
